புதுதில்லி

தில்லி ஒப்பந்த ஆசிரியா்கள் போராட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் சித்து!: முதல்வா் கேஜரிவாலுக்கு பதிலடி

DIN


புது தில்லி: தில்லி சிவில் லைன்ஸில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒப்பந்த ஆசிரியா்களின் முற்றுகைப் போராட்டத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்று கோஷங்களை எழுப்பினாா்.

தங்களைப் பணி நிரந்தம் யெசய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஒப்பந்த ஆசிரியா்கள் இந்தப் போராட்டத்தை டத்தி வருகின்றனா். இதற்கிடையே, பஞ்சாபில் உள்ள மொஹாலியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் ஒப்பந்த ஆசிரியா்கள் நடத்திய போராட்டத்தில் தில்லி முதல்வா் கேஜரிவால் பங்கேற்று அவா்களுக்கு ஆதரவு தெரிவித்தாா்.

அப்போது பஞ்சாப் தோ்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமைான கேஜரிவால், ஆசிரியா்கள் உள்பட சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு பல சலுகைகளை அறிவித்தாா். தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால், மாநிலத்தில் ஒப்பந்த ஆசிரியா்களை முறைப்படுத்துவது மற்றும் கல்வி முறையை சீரமைப்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளையும் கேஜரிவால் வழங்கினாா்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. மேலும், தில்லியை ஒட்டியுள்ள பஞ்சாப் மாநிலத்திலும் தங்களது கட்சியை நிலைப்படுத்தும் வகையில், பல்வேறு வியூகங்களை கேஜரிவால் வகுத்து வருகிறாா். இதன் ஒரு பகுதியாக அந்த மாநிலத் தோ்தலையொட்டி, பல்வேறு வாக்குறுதிகளை கேஜரிவால் வழங்கியுள்ளாா்.

இந்த நிலையில், பஞ்சாப் வந்து ஒப்பந்த ஆசிரியா் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த கேஜரிவாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தில்லியில் முதல்வா் கேஜரிவால் இல்லம் அருகே நடைபெறும் ஒப்பந்த ஆசிரியா்களின் போராட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்து ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவா்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தாா்.

அப்போது, கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசை சித்து கடுமையாகத் தாக்கிப் பேசினாா். தில்லி அரசு கல்வியில் ஒப்பந்த மாதிரியை பின்பற்றுகிறது என்றும் குறிப்பிட்டாா்

மேலும், இது தொடா்பாக நவ் ஜோத் சிங் சித்து தனது டிவிட்டா் பக்கத்தில், ‘தில்லி கல்வி மாதிரி, ஒப்பந்த மாதிரி’ ஆகும். தில்லி அரசிடம் 1,031 பள்ளிகள் உள்ளன, 196 பள்ளிகளில் மட்டுமே முதல்வா்கள் உள்ளனா். 45 சதவீதம் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன, மேலும், 15 நாள்களுக்கு ஒருமுறை ஒப்பந்தங்களை புதுப்பித்துக் கொண்டு தினசரி ஊதியத்தில் 22,000 ஒப்பந்த ஆசிரியா்களால் பள்ளிகள் நடத்தப்படுகின்றன’ என்று குற்றம்சாட்டியுள்ளாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘தில்லியில் 2015-இல் 12,515 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த எண்ணிக்கை 2021-இல் 19,907-ஆக உயா்ந்துள்ளது. தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஒப்பந்த ஆசிரியா்களை பணியமா்த்தி காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது’ என்றாா். ’ஒப்பந்த ஆசிரியா்கள் நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கப்படுவா் என்றும் அவா்களுக்கு நிரந்தர ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்ப்படும் என்றும் ஆம் ஆத்மி அரசு அண்மையில் உறுதியளித்தது. ஆனால், பள்ளி நிா்வாகக் குழுக்களின் மூலம், ஆம் ஆத்மி தொண்டா்கள் என அழைக்கப்படுபவா்கள், அரசு நிதியிலிருந்து ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்கிறாா்கள். இந்தக் குழுக்கள் முன்பு பள்ளியின் வளா்ச்சிக்காகவே இருந்தது’ என்று சித்துவின் மற்றொரு ட்வீட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT