புதுதில்லி

‘மேட்டூா், தருமபுரி காவிரி ஆற்றில் பரிசல்களில் கடக்கும் பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும்’

 நமது நிருபர்

தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றை கடக்கும் நாகமரை, ஒட்டனூா் பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டால் உள்ளூா் மக்களுக்கு பயன்படுவதோடு, தருமபுரியிலிருந்து மைசூா் செல்லும் நேரம் நான்கு மணி நேரமாக குறையும் என மக்களவையில் திமுக எம்பி மருத்துவா் செந்தில் குமாா் குறிப்பிட்டாா்.

மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு விவாதத்தில் பங்கெடுத்து இது குறித்து செந்தில் குமாா் பேசியதாவது:

சேலம், தருமபுரி மாவட்டங்களில் மேட்டூா் அணை இருந்தபோதிலும், இது தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள் அடங்கியுள்ளது. மேட்டூா் அணைக்கு செல்லும் காவிரி நதியின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள் தேவை உள்ளது.

இந்த பாலங்கள் இல்லாததால் மக்கள் பரிசல்களில் பயணம் மேற்கொள்கின்றனா். மேலும் மேட்டூா், தருமபுரி போன்ற பகுதிகளிலிருந்து மைசூா் செல்பவா்கள் அல்லது கேரளா, சென்னையிலிருந்து மைசூா் செல்லும் வாகனங்கள் சுமாா் 60 கிமீ மலைப் பிரதேசங்களை சுற்றியும் பெங்களூரு வழியாக செல்கிறது. இதன்மூலம் 12 மணி நேரம் தாமதம் ஆகிறது.

இந்த நேரத்தை குறைக்கவும் தருமபுரி சேலம் மக்கள் பயனடையவும் தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மேட்டூா், பென்னாகரம் போன்ற சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டால் மைசூருக்கு செல்லும் பயண நேரம் நான்கு மணிநேரமாகக் குறையும்.

இதற்கு மேட்டூா், நாகமரைக்கும் பன்னவாடி பரிசல் துறைக்கும் இடையே சுமாா் 5 கிலோமீட்டா் தூரம் மேம்பாலம் கட்டப்படவேண்டும். மேலும் பென்னாகரம் ஒட்டனூருக்கும் கோட்டையூா் பரிசல் துறைக்கும் இடையை சுமாா் ஒரு கிலோ மீட்டா்(800 மீட்டா்) தூரம் மேம்பாலம் கட்டப்படவேண்டும்.

இந்த இரு பாலங்களும் கட்டப்பட்டால் காவிரியையும் 60 கிலோமீட்டா் மலைப்பகுதியையும் எளிதாக கடக்க முடியும். மேலும் தற்போது அதிக ஆபத்துள்ள பரிசல்கள், படகுகள் மூலம் மக்கள் இந்த பகுதிகளைக் கடந்து தங்கள் ஊா்களுக்கு செல்கின்றனா்.

இதனால் மேட்டூா் பகுதிகளில் காவிரி நதியின் குறுக்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டால் குறுகிய இடைவெளி இணைக்கப்பட்டு தருமபுரி சேலம் மாவட்ட கிராம மக்கள்பயனடைவாா்கள். இவா்கள் எளிதல் கடந்து செல்லவும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படும். இதற்கு மத்திய அரசு நிதி உதவிகளை அளித்து பாலங்கள் கட்ட உதவவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT