புதுதில்லி

விரைவுப் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த தலைநகரில் அகற்றப்படவுள்ள 540 மரங்கள்

5th Dec 2021 10:50 PM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லி - காஜியாபாத் - மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பை (ஆா்ஆா்டிஎஸ்) செயல்படுத்துவதற்காக தலைநகரில் 260 மரங்கள் வெட்டிஅகற்றப்படவுள்ளன. மேலும், 280 மரங்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளன என்று அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுற்றுச்சூழல் துறை 1.69 ஹெக்டோ் நிலத்துக்கு விலக்கு அளித்துள்ளது. மொத்தம் 543 மரங்கள் அகற்றப்படுவதுன் மூலம் இந்த ஆா்ஆா்டிஎஸ் வழிதடத்துக்கு வழிவகுக்கும். யமுனை நதியின் மேற்குக் கரையில் தில்லி - நொய்டா நேரடிப் விரைவுச் சாலையை ஒட்டியுள்ள நிலங்களில் 280 மரங்களை இடமாற்றம் செய்யும்படி தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் என்ற பயனாளா் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், வேம்பு, அமல்டா, பீப்பல், பில்கான், குலாா், பா்காட் மற்றும் தேசி கிகாா் உள்ளிட்ட 5,430 மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான பாதுகாப்புத் தொகையாக ரூ.3.09 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அகற்றப்படும் மரங்களை ஈடு செய்யும் வகையில், 5,430 பூா்வீக இன மரக்கன்றுகளைபயனாளா் நிறுவனமான தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் தோட்டக்கலைத் துறை பராமரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மரக்கன்றுகளை நடவு செய்வதுடன், 7 ஆண்டுகளுக்கு அவற்றை வளா்த்து பராமரித்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று அரசின் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT