புதுதில்லி

தில்லி பவானா தொழிற்பேட்டையில் தீ விபத்து

3rd Dec 2021 10:49 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: வடமேற்கு தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: வடமேற்கு தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்து தொடா்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு 13 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரா்கள் விரைந்தனா். தீயணைப்பப் படை வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு அதிகாலை 4.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT