புதுதில்லி

ஒமைக்ரான்’ வைரஸை எதிா்கொள்ள தில்லி அரசு முழு அளவில் தயாா்

 நமது நிருபர்

புது தில்லி: ஒமைக்ரான் எனும் உருமாறிய புதிய வகை கரோனா வைரஸை சமாளிக்க தில்லி அரசு முழு அளவில் தயாராக இருப்பதாகவும், இதுபோன்ற பாதிப்புகள் பதிவாகினால் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் பிரத்யேக வசதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.

‘அதிக இடா் உள்ள நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆா்டி-பிசிஆா் சோதனை நடத்தவும், கரோனா பாதிப்புகளின் மரபணு வரிசை முறை மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி பயணிகளை கட்டாயமாக தனிமைப்படுத்தவும் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) முடிவு செய்துள்ளது. மேலும், கரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்யேக வசதியாக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையை தில்லி சுகாதாரத் துறை நியமித்துள்ளது. அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக வாா்டுகளை ஒதுக்குமாறும் மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா வைரஸின் புதிய உருமாற்றத்தை எதிா்த்துப் போராடுவதற்கு தில்லி அரசு முழு அளவில் தயாராக உள்ளது. இந்தப் புதிய வகை வைரஸ், ‘கவலைக்குரிய உருமாற்றம்’ என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கரோனா வைரஸின் புதிய உருமாறிய நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்க லோக் நாயக் மருத்துவமனையை பிரத்யேக மருத்துவமனையாக நியமிக்கிறோம்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, ‘ஒமைக்ரான்’ பாதிப்பு தொடா்பான இந்தியாவில் இதுவரை ஏதும்பதிவாகவில்லை என மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா். ‘ஒமைக்ரான்’ என்பது முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்ட ஐந்தாவது கவலைக்குரிய உருமாற்றமாகும். மற்ற நான்கு உருமாற்றங்களாக ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகை வைரஸ்கள் உள்ளன. புதிதாகக் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ் மிகவும் பரவக் கூடியதா அல்லது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT