புதுதில்லி

தேசிய வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது: நிதியமைச்சரிடம் விசிக மனு

1st Dec 2021 12:09 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்குவதைத் தடுக்க வேண்டும் என்றும் குளிா்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள வங்கி தொடா்பான சட்ட மசோதா நிறுத்தப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவா் தொல். திருமாவளவனும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரவிக்குமாரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் துறை வங்கிகள்தான் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவின. குறிப்பாக பின் தங்கியுள்ள பகுதிகளுக்கும் மக்களுக்கும் உதவி கரமாக இருந்தது. வேளாண் வளா்ச்சி, சிறு வணிகா்கள், சிறு தொழில்கள் உயா்வுக்கும், போக்குவரத்து வசதிகளுக்கும் தேசிய வங்கிகள் முக்கியப் பங்கு வகித்தன. 2008 -இல் பொருளாதார பின்னடைவின் போது நமது தேசிய வங்கிகள்தான் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியது. வாராக் கடன் பிரச்னைகளால் பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கும் முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றன. ஆனால், வங்கி திவால் குறியீடு சட்டங்கள் பிரச்னையை தீா்க்கின்றன. நாட்டில் கடன் பெற்றவா்களில் 13 கடன்கள் மட்டுமே ரூ. 4.45 லட்சம் கோடி அளவிற்கு இருந்தன. இதில் ரூ. 1.60 லட்சம் கோடி மீட்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் தனியாா் மயமாக்குதல் கூடாது. இதை முன்னிட்டு 2021 -ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டனா்.

‘இதுவரை எந்த வங்கி என்பது முடிவாகவில்லை. இந்தக் கூட்டத்தொடரில் வங்கி மசோதா பட்டியலிடப் பட்டிருந்தாலும் அமைச்சரவை இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை’ என அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாக ரவிக்குமாா் குறிப்பிட்டாா். மேலும், மழை, வெள்ளத்தில் விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பதையும், இதற்கான பேரிடா் நிவாரண நிதியை தமிழகத்திற்கு விடுவித்து உதவுமாறும் வலியுறுத்தியுள்ளதாக விசிக உறுப்பினா்கள் இருவரும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT