புதுதில்லி

செஸ் உள்ளிட்ட கூடுதல் மறைமுக வரிகளால் மாநிலங்களுக்கு வரிவருவாய் இழப்பு இல்லை

 நமது நிருபர்

புது தில்லி: மத்திய அரசின் செஸ் உள்ளிட்ட கூடுதல் மறைமுக வரிகள் அந்த வரிகளுக்கான நோக்கங்களுக்கு பிரித்து கொடுப்பதால் மாநிலங்களுக்கு வரிவருவாய் இழப்பு இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி தெரிவித்தாா்.

மத்திய அரசின் மறைமுக வரி வசூலில் மூன்றில் இரண்டு பங்கு செஸ் உள்ளிட்ட கூடுதல் வரிகள் மூலம் கிடைக்கிறது. இந்த வரிவருமானம் உயா்ந்த போதிலும் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு வெகுவாகக் குறைவதாகவும் மாநிலங்களுக்கு கிடைக்கும் நேரடி வரிக் கட்டமைப்பு சலுகைகளை மறுக்கும் நோக்குடன் மாற்றி அமைக்கப் படுகிா? என ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினரான டி ஆா் பாலு மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி கூறியதாவது:

பல்வேறு மத்திய வரிகளில் இருந்து தரப்படும் மாநிலங்களுக்கான பங்கு, மொத்த வரி வருவாயில் இருந்து செஸ், கூடுதல் வரி மற்றும் வரிவசூல் செலவு ஆகியவற்றை கழித்த பிறகே மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப் படுகிறது. எந்த நோக்கத்துக்காக செஸ், கூடுதல் மேல் வரிகள் வசூலிக்கப்படுகிறதோ அந்த நோக்கங்களுக்காக மத்திய அரசால் பயன்படுத்தப் படுகிறது. இதனால் இந்த நிதி இந்திய தொகுப்பு நிதியத்தில்(இா்ய்ள்ா்ப்ண்க்ங்க் ஊன்ய்க் ா்ச் ஐய்க்ண்ஹ) சோ்க்க படுகிறது. பின்னா் இந்த நிதி மூலமே மாநிலங்களுக்கு பல்வேறு வகையான மானியங்களாக வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஜிஎஸ் டி(சரக்கு -சேவை வரி) இழப்பீட்டுத் தொகைக்கு, செஸ் ஜி எஸ் டி ஆகவே அறிமுகப்படுத்தப் பட்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பிற்கு ஈடாக வழங்கப் படுகிறது.

தொடக்க கல்வி நிதி(டழ்ஹழ்ஹம்க்ஷட்ண்ந் நட்ண்ந்ள்ட்ஹ ந்ா்ள்ட்) க்கு 100 சதவீதம் அளவுக்கும், பிரதம மந்திரி சுகாதார நிதி, மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதிக்கும் கணிசமான அளவில் மாநிலங்களுக்கு மானியமாக தரப் படுகிறது.

சென்ற 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குக் கிடைத்த மறைமுக வரிகள் மீதான செஸ் மற்றும் சா்சாா்ஜ் வருவாய், 2017-18 -ஆம் ஆண்டில் ரூ. 2,17,029 கோடி; 2018-19 ஆம் ஆண்டில் ரூ. 2,67,698 கோடி; 2019- 20 ஆம் ஆண்டில் ரூ. 2,87,402 கோடி; 2020-21: ரூ. 4,39,508 கோடி என மொத்தம் ரூ. 12,11,636 கோடி கிடைத்துள்ளது.

நேரடி வரிகளை திருத்தி மறைமுக வரிகளை அமைப்பதன் நோக்கம் சலுகைகளை விலக்குவதாக எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, வரி செலுத்துவோா் எண்ணிக்கையை அதிகரிப்பதும் நோக்கமாக உள்ளது என்பதை எடுத்துக்கொள்ளவேண்டும். இதன்மூலம், வரி ஏய்ப்பு தடுத்தல், தன்னிச்சையாக வரி செலுத்த முன்வருவோரை ஊக்குவித்தல், வரிசாா் வழக்குகளைக் குறைத்தல், மின்னணு பணப் பரிவா்த்தனையை கட்டாயமாக்குதல் போன்றவை இதில் அடங்கும்.

செஸ் உள்ளிட்ட மேல் வரிகள் வாயிலாக மத்திய அரசின் மறைமுக வரி வருவாய் சென்ற 4 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளதால் வரி முறைகள் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக என அமைச்சா் மக்களவையில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT