புதுதில்லி

மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்றுதடுப்பூசி போடக்கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

DIN

தில்லியில் நடமாட முடியாமல் படுத்த படுக்கையால் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி அளிக்கும் வகையில் கொள்கைத் திட்டத்தை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரும் பொது நல மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இது தொடா்பாக தில்லியைச் சோ்ந்த, மூட்டுவாத பிரச்னையால் அவதியுறும் 84 வயது திராஜ் அகா்வால் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், இது போன்ற மூத்த குடிமக்களை பதிவு செய்ய ஹெல்ப்லைன் வசதியும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வினய் குமாா் ஆஜராகி வாதிட்டாா்.

அப்போது, மனு மீது மத்திய அரசும், தில்லி அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை செப்டம்பா் 16-க்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

SCROLL FOR NEXT