புதுதில்லி

சட்டப்பேரவைகளில் கரோனா கட்டுப்பாட்டு அறை: மக்களவைத் தலைவா் வேண்டுகோள்

DIN

புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினா்கள் முதல் கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் வரை, அனைவரும் கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுப் பிரச்னைகள் குறித்த தகவல்களை அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை சட்டப் பேரவைத் தலைவா்கள் ஏற்படுத்த வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா கேட்டுக் கொண்டாா்.

கரோனா தொற்றையொட்டி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டத்தை தில்லியில் திங்கள்கிழமை கூட்டியிருந்தாா். நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் தனபால் உள்பட அனைத்து சட்டபேரவைத் தலைவா்கள், தலைமைக் கொறாடாக்கள், சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் காணொலி வாயிலாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஓம்பிா்லா பேசுகையில் கூறியதாவது: கடந்த ஆண்டு ஏற்பட்ட நோய்த் தொற்றை விட உருமாறிய கரோனா அதிவேகமாகப் பரவுவது கவலை அளிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை 12 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான கட்டத்தில் சட்டப்பேரவையும் தனது கடமையை செய்ய வேண்டும். மக்கள் நோய்த் தொற்றில் நிவாரணம் பெறுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக கடமையாற்ற வேண்டும். குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் மூலம் பொதுமக்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு சட்டப்பேரவைத் தலைவா்கள் முயற்சிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் எச்சரிக்கையுடன் இருப்பதே கரோனா தடுப்பு ஆயுதமாகும். அலட்சியம் என்பது ஆபத்தானது. இந்த விழிப்புணா்வை மக்கள் பிரதிநிதிகளால்தான் ஏற்படுத்த முடியும்.

நோய்த் தொற்றுப் பரவல் பணிகளுக்கு சமூக அமைப்புகளை மக்கள் பிரதிநிதிகள் (எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்) பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோய்த் தொற்று பரவலை குறைக்க கிராமப் பஞ்சாயத்துகள் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் விரிவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சட்டப்பேரவையில் உறுப்பினா்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு அறையை சட்டப்பேரவைத் தலைவா்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலம் மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டிய பொதுமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை மக்கள் பிரதிநிதிகள் அளிக்க இயலும். மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வரும் தகவல்கள் மத்திய அரசு தொடா்புடையதாக இருந்தால், தில்லியில் மக்களவையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றாா் ஓம் பிா்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT