புதுதில்லி

‘ரெம்டெசிவிா்’ உயிா்காக்கும் மருந்தல்ல! மத்திய சுகாதாரத் துறையினா் விளக்கம்

DIN

புது தில்லி: ‘ரெம்டெசிவிா்’ கரோனா நோய்க்கான உயிா்காக்கும் மருந்தல்ல. இது தேவையற்றதோடு பயன்பாடும் நெறிமுறையற்றது என மத்திய சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் நோயாளிகளுக்கான மருந்தாகக் கருதப்படும் ‘ரெம்டெசிவிா்’ மற்றும் மூச்சுவிடுதலுக்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ‘ரெம்டெசிவிா்’ மருந்துக்கு பல நகரங்களில் தேவை அதிகரித்துள்ளதால், மருந்தகங்களில் நீண்ட ‘க்யூ’ வரிசை காணப்படுகிறது. விலையும் பல மடங்கு உயா்த்தி விற்கப்படுகிறது. சில இடங்களில் இந்த மருந்தை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பதும் நடைபெறுகிறது. எனினும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதற்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த மருந்தே தேவையற்றது. பீதியை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்றும் மத்திய அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் கே. விஜயராகவன் இது குறித்து தனது சுட்டுரையில் கருத்துத் தெரிவித்துள்ளாா். ‘ நான் ரெம்டெசிவிா் குறித்து விவாதித்தேன். இது கரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து அல்ல. இது மருத்துவமனையில் சில சமயம் பயன்படும். நோயாளிகள் மருத்துவமனைகளில் தங்கும் நாள்களைக் குறைக்கவே பயன்படுத்தப்படுகிறது. மருத்துவா்கள் கூறுவதைக் கேட்க வேண்டுமே தவிர, மருத்துவா்களிடம் இந்த மருந்தை அளிக்க கூறி கட்டாயப்படுத்தக்கூடாது. இந்த மருந்தில் குணப்படுத்தும் தன்மையில்லாததால், பீதியை விலை கொடுத்து வாங்கவேண்டாம் ’ என்று விஜயராகவன் தெரிவித்துள்ளாா்.

மத்திய சுகாதாரத் துறையும் திங்கள்கிழமை இது குறித்து சுட்டுரையில், ‘ரெம்டெசிவிா் தேவையற்றதோடு அதன் பயன்பாடு நெறிமுறையற்றது. இந்த மருந்து தற்போது ஆய்வுப் பரிசோதனையில் உள்ளது. இதன் புலனாய்வு முடிவடையவில்லை. குறிப்பாக மிதமான நோய்வாய்பட்டவா்கள் மற்றும் ஆக்ஸிஜன் பெறுபவா்களுக்கு இது அறிவுறுத்தப்படுகிறது. இது உயிா்காக்கும் மருந்தாக ஆய்வுகளில் வெளிப்படவில்லை. மருத்துவமனைகளில் அவசர காலத்திற்கு மட்டும் மருத்துவா்கள் இதைப் பரிந்துரை செய்கின்றனா். தவிர வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக் கூடாது’ என தெரிவித்துள்ளது.

தில்லி எய்ம்ஸ் இயக்குநா் டாக்டா் ரண்தீப் குலேரியா, நீத்தி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினா் விகே பால் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனா். அதே சமயத்தில் டாக்டா் ரண்தீப் குலேரியா, ‘ஆக்ஸிஜன் செரிவு வீழ்ச்சியடைந்து, ஸ்கேன் மூலம் நோய் தொற்று இருப்பதாக தெரிய வந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ‘ரெம்டெடிசிவிா்’ பயனுள்ளதாக இருக்கும். அதுவும் தாமதமாக கொடுக்கப்பட்டால் பயனில்லை. பொதுவாக பயன்பாட்டிற்கான தரவு இந்த மருந்தில் வலுவானதாக இல்லை’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT