புதுதில்லி

வேட்புமனுவில் தவறான கல்வித் தகுதி விவகாரம்: திரி நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ பதில் அளிக்க நோட்டீஸ்

DIN

வேட்புமனு தாக்கலில் கல்வித் தகுதி தொடா்பாக பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறி, தோ்தல் வெற்றியை எதிா்த்து தாக்கலான மனு மீது திரி நகா் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரீத்தி தோமா் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தில்லி அரசின் முன்னள் அமைச்சா் ஜிதேந்தா் சிங் தோமா். இவா் மீது 2015-ஆம் ஆண்டு தோ்தலின் போது வேட்புமனுவில் போலி பட்டச் சான்றிதழை சமா்ப்பித்ததாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தில்லி உயா்நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அந்த ஆண்டு அவரது எம்எல்ஏ தோ்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இவரது மனைவி பிரீத்தி தோமா், திரி நகா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவா் தோ்தலின் போது வேட்புமனுவில் கல்வித் தகுதி குறித்து பொய்த் தகவல்களை அளித்ததாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சக்தா், இது தொடா்பாக பதில் அளிக்க பிரீத்தி தோமா், தோ்தல் அதிகாரி (ஆா்ஓ) ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும், வழக்கு விசாரணையை டிசம்பா் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரீத்தி தோமா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அனில் சோனி தெரிவித்தாா். மேலும், ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரீத்தி தோமரின் கல்வித் தகுதிகள் குறித்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளதால் அவரது வேட்பு மனுவை பாதுகாக்க வேண்டும் என்று தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக திரி நகா் தொகுதியைச் சோ்ந்த நவீன் பராஷா் என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘ பிரீத்தி தோமா் வேட்பு மனுவில் தாம் எம்.எஸ்சி. மற்றும் பி.எட் தோ்ச்சி பெற்ாக தவறான தகவல்களை அளித்துள்ளாா். இதன் மூலம் வாக்காளா்கள் மீது தேவையற்ற செல்வாக்கை அவா் செலுத்தியுள்ளாா். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் ஊழல் நடைமுறைக்குச் சமம் என்று அா்த்தமாகும். ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ பட்டதாரிகூட இல்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, தனது பி.எட் படிப்பை 1994-இல் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் முடித்ததாகத் தெரிவித்துள்ளாா். ஆனால், அந்த ஆண்டில் அந்தப் பல்கலைக்கழகத்தில் அதுபோன்ற படிப்பு ஏதும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT