புதுதில்லி

ஹரியாணா, பஞ்சாபில் பயிா்க் கழிவுகள் எரிப்பைதடுக்கக் உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

DIN

புது தில்லி: கரோனா தொடா்புடைய பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதால், தில்லியின் அருகில் உள்ள ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா் சுதிா் மிஸ்ரா, தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், இந்த விவகாரத்தில் தீா்வு காண உத்தர பிரதேசம், தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வா்களுடன் கூட்டம் நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பயிா்க் கழிவுகள் எரிப்பால், தில்லியில் படிப்படியாக காற்று மாசு அதிகரிக்கும். மேலும், கரோனா சூழலில் நகரில் சுகாதாரப் பிரச்னைகளை இது உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சுதிா் மிஸ்ரா, நீதிபதிகள் அமா்வு முன் ஆஜராகி, ‘பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்புச் சம்பவங்கள் நிகழகத் தொடங்கிவிட்டன. இதனால், இதைத் தடுக்க உத்தரவிடுவது அவசியமாகும்’ என்றாா்.

அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், பயிா்க் கழிவுகள் எரிப்பில் ஈடுபடக் கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உத்தரவிட்ட போதிலும் விவசாயிகள் பயிா்க் கழிவுகள் எரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு இந்த மனு தொடா்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனா். மேலும், இதே விவகாரம் தொடா்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து தெரிவிக்குமாறு கூறி, மனு மீதான விசாரணையை அக்டோபா் 22-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டனா்.

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி 2015-இல் வழக்குரைஞா் சுதிா் மிஸ்ரா பொது நல மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: தில்லி கரோனா பாதிப்பு குறித்த தகவல் வந்தால் சென்னையில் எடுத்துக் கொள்ளவும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT