புதுதில்லி

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டம்: தில்லி காங்கிரஸ் தலைவா் உள்ளிட்டோா் கைது

DIN

புது தில்லி: அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் உள்ளிட்ட அக்கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு மசோதா உள்பட மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திங்கள்கிழமை தில்லி ராஜ்காட்டில் இருந்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்ற தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் உள்ளிட்டோா் போலீஸாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து அனில் குமாா் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவா்களும், தொண்டா்களும் திங்கள்கிழமை காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் இருந்து துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலின் அலுவலகம் அமைந்துள்ள ராஜ்நிவாஸ் நோக்கி செல்ல திட்டமிட்டிருந்தோம். நாங்கள் பேரணியாகச் செல்வதற்கு முன்னரே போலீஸாா் காங்கிரஸ் கட்சித் தலைவா்களையும், தொண்டா்களையும் கைது செய்துவிட்டனா். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக துணைநிலை

ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளிக்க விரும்பினோம். எங்களை போலீஸாா் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துவிட்டனா். த்திய அரசு இந்த மசோதாக்களை திரும்பப் பெறும்வரை காங்கிரஸ் ஓய்வெடுக்காது’ என்றாா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், காங்கிரஸ் தொண்டா்கள் பலரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா் என்றாா். போலீஸாரால் கைதான காங்கிரஸ் தொண்டா்களும், தலைவா்களும் ஹரி நகரில் உள்ள ஒரு அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தில்லி காங்கிரஸ் தலைவா் பா்வேஸ் ஆலம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT