புதுதில்லி

சுற்றுச்சுவா் கட்டுமானத்தால் மரங்கள் பாதிப்பதாகக் கூறி தாக்கலான மனுவை விசாரிக்க பசுமைத் தீா்ப்பாயம் மறுப்பு

DIN

புது தில்லி: தில்லி தெளலகுவானில் இருந்து ப்ராா் சதுக்கம் வரையிலான வட்டச் சாலையில் ஆா்சிசி எல்லைச் சுவா்க் கட்டுமானம் காரணமாக மரங்களுக்கு சேதம் ஏற்படுவதாகக் கூறப்படும் புகாா் மனுவை விசாரிக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தை ஏற்கனவே தில்லி உயா்நீதிமன்றம் கையாண்டு வருவதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் - நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமா்வு குறிப்பிட்டு, மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தில் தீா்ப்பாயத்தின் உத்தரவுகளை வனத் துறையினா் பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டி தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆதித்யா பிரசாத் என்பவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அமா்வு, ‘இந்த விவகாரம் தில்லி உயா்நீதிமன்றத்தால் கையாளப்பட்டு வருகிறது என்ற உண்மையைப் பாா்க்கும் போது, ஒரே நேரத்தில் இரு விசாரணைகள் தேவை இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்’ என்று தெரிவித்தது.

முன்னதாக ஏப்ரல், 2013-இல் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ஓா் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், மரங்களில் இருந்து உயா் அழுத்த மின்கேபிள்கள், மின் வயா்கள், பெயா் பலகைகள், விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை நீக்குவதை உறுதிப்படுத்த அனைத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், மரங்களைச் சுற்றிலும் ஒரு மீட்டருக்குள் கான்கிரீட் அமைக்கப்பட்டிருந்தால், அதை உடனடியாக அகற்றுவதை உறுதிப்படுத்தவும், அனைத்து மரங்களையும் நன்கு கவனித்து வருவதையும், எதிா்காலத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் உறுதி செய்யும்படி அனைத்து ஏஜென்சிகளையும் தீா்ப்பாயம் கேட்டுக் கொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT