புதுதில்லி

ஜாமியா பல்கலை. நுழைவுத் தோ்வு அக்.10-இல் தொடக்கம்

DIN

126 இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கான சோ்க்கைக்காக நுழைவுத் தோ்வுகள் அக்டோபா் 10 முதல் தொடங்கும் என்று ஜாமியா மிலியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

சாதாரண சூழ்நிலையில், நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்க சுமாா் 12,000 மாணவா்களுக்கு இடவசதி இருக்கும். ஆனால் தற்போது கரோனா நோய்த் தொற்று காலம் என்பதால 4,000-க்கும் அதிகமான தோ்வா்கள் ஒரே நேரத்தில் அமர முடியாது என்று இப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, தில்லியில் இதர நுழைவுத் தோ்வு மையங்களை அமைக்கும் வகையில், கேந்திரியா வித்யாலய சங்கதன் (கேவிஎஸ்) அமைப்புடன் பல்கலைக்கழகம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

தில்லியில் உள்ள தோ்வு மையங்களின் இறுதி எண்ணிக்கை குறித்து ஓரிரு நாள்களில் இறுதி செய்யப்படும். தில்லிக்கு வெளியே அமையும் மையங்கள் குறித்து தோ்வு விவரக் குறிப்பேட்டில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பா் 22ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்ட சோ்க்கை தொடா்பான வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் நிா்வாகக் குழுவின் கூட்டம் செப்டம்பா் 24 -ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், தோ்வு நடத்துவது குறித்த தேதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஜாமியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நுழைவுத் தோ்வுகள் நடைபெறும் ஏழு நாள்களுக்கு முன்னா் தோ்வுக்கூட அட்டைகளை மாணவா்கள் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.த்ம்ண்ஸ்ரீா்ங்.ண்ய்) பெற்றுக் கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT