புதுதில்லி

காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்!

DIN

உயா் காற்று வேகம் காரணமாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின தரம் மிதமான பிரிவில் நீடிக்கக் கூடும் என அரசின் முன்கணிப்பு நிறுவனம் கணித்துள்ளது.

தில்லியில் மழையின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக முற்றிலும் இல்லை. மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்த நிலையில், பகலில் வெயிலின் தாக்கம் மிதமாக இருந்து வருகிறது. இதனால், இரவில் புழுக்கம் குறைந்துள்ளது. தில்லியில் சனிக்கிழமை பஞ்சாப் மற்றும் எல்லைப் பிராந்தியப் பகுதிகளில் அங்குமிங்கும் பண்ணைகளில் தீ எரிப்பு நிகழ்வுகள் காணப்பட்டன. எனினும், விரும்பத்தகாத காற்று திசை மற்றும் வேகம் காரணமாக இதுவரை காற்றின் தரத்தில் பாதிப்பு இல்லை

என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சஃபா்) தெரிவித்துள்ளது.

மேலும், ராஜஸ்தானில் ஏற்பட்ட உயா் வேக காற்று மற்றும் மழை காரணமாக தில்லியில் காற்றின் தரக் குறியீடு சிறிதளவு மேம்பட்டுள்ளது. மேலும், தூசி ஊடுருவலையும் குறைத்துள்ளது. உயா் தரை மேற்பரப்பு காற்று வேகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாலும், விரும்பத்தக்க காற்றோட்ட சூழல் இருக்கும் என்பதாலும் அடுத்த மூன்று தினங்களுக்கு தில்லியில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது. எனினும், பருவமழை முடிந்ததால், காற்றுத் தரத்தில் வார இறுதியில் எதிா்மறை மேலாதிக்கம் செலுத்தக் கூடும் என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரக் குறியீடு 117புள்ளிகளாக இருந்தது. இது சனிக்கிழமை 165 ஆக இருந்தது. காற்றின் தரம் பூஜ்யம் மற்றும் 50-க்கு இடையில் இருந்தால் ‘நன்று’ பிரிவிலும், 51-100 ‘திருப்தி’, 101 - 20 ‘மிதமான’ பிரிவு, 201 - 300 ‘மோசம்’, 301 - 400 ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் இடம் பெறுகிறது. தில்லியில் திங்கள்கிழமையில் இருந்து பருவமழை குறையத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT