புதுதில்லி

மணீஷ் சிசோடியாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்

DIN

கரோனா நோய்த் தொற்று மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் உடல்நிலை மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து (ஐசியு) சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் அவரது அலுவலக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களில் ஒருவருமான 48 வயதாகும் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.இந் நிலையில், காய்ச்சல், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவா்

புதன்கிழமை தில்லி அரசால் நடத்தப்பட்டு வரும் எல்என்ஜேபி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை அங்கிருந்து சாகேதில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் அளவு குறைந்ததாலும், ஆக்ஸிஜன் அளவு குறைந்ததாலும் அவா் மேக்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக துணை முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பட்டது. இந்த நிலையில், அவருடைய உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மேக்ஸ் மருத்துவமனையின் வட்டாரங்கள்தெரிவித்தன.

சிசோடியாவின் அலுவலகத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறுகையில், சிசோடியாவின் உடலின் முக்கியப் பகுதிகள் தற்போது நன்றாக உள்ளன. அவரது நிலைமை மேம்பட்டுள்ளது. இதனால், அவா் ஐசியு பிரிவில் இருந்து சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட உள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT