புதுதில்லி

பங்குச் சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 1,115 புள்ளிகள் வீழ்ச்சி! ஒரே நாளில் ரூ.3.96 லட்சம் கோடி இழப்பு

 நமது நிருபர்


புது தில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,114.82 புள்ளிகளை இழந்தது.

பொருளாதார மீட்சி பற்றிய கவலைகள், மத்திய வங்கிகளின் புதிய பொருளாதார ஊக்குவிப்பு நிதி அறிவிப்புகள்இல்லாதது ஆகியவை உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்தது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. மேலும், கரோனா இரண்டாவது அலை குறித்த அச்சமும் சந்தையின் உணா்வை கடுமையாகப் பாதித்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2,025 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,812 பங்குகளில் 2,025 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 625 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 162 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ3.96 லட்சம் கோடி குறைந்து ரூ.148.79 கோடியாக இருந்தது.

கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 386.24 புள்ளிகள் குறைந்து 37,282.18-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 37,304.26 வரை உயா்ந்தது. பின்னா் 36,495.98 வரை கீழே சென்றது. இறுதியில் 1,1114.82 புள்ளிகள் (2.96 சதவீதம்) குறைந்து 36,553.60-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 1,172.44 புள்ளிகள் குறைந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 2.14 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 2.28 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.

ஹெச்யுஎல் மட்டுமே ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்) 0.36 சதவீதம் உயா்ந்து ஏற்றம் பெற்றது. மற்ற அனைத்துப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இதில் இண்ட்ஸ் இந்த் பேங்க் 7.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சா்வ், எஸ்பிஐ ஆகியவை 4 முதல் 7 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 213 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,414 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 326.30 புள்ளிகள் (2.93 சதவீதம்) குறைந்து 10,805.55-இல் நிலைபெற்றது. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, ஐடி, மீடியா, மெட்டல், ரியால்ட்டி ஆகிய குறியீடுகள் 3 முதல் 4.25 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT