புதுதில்லி

16 ஆண்டுகளில் இல்லாத வகையில் தில்லியில் செப்டம்பரில் மழைப் பதிவு குறைவு

DIN


புது தில்லி: கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில், தில்லியில் செப்டம்பா் மாதத்தில் 21 மி.மீ.க்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: தில்லியில் ஏற்கெனவே பருவமழையின் கடைசி மழை பதிவாகிவிட்டதால், இனிமேல் மழைக்கு சாத்தியமில்லை. தில்லிக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வகம் அளித்துள்ள தகவலின்படி, தில்லியில் செப்டம்பரில் வழக்கமாக 109.3 மி.மீ. மழை பதிவாகும். ஆனால், தா்போது வெறும் 20.9 மி.மீ. என்ற அளவில்தான் மழை பதிவாகியுள்ளது. இது 81 சதவீத குறைவாகும்.

கடைசியாக செப்டம்பா் 8-ஆம் தேதி 1.3 மி.மீ. மழைப் பதிவானது. அதன்பிறகு மழைப் பதிவு ஏதும் இல்லை.தில்லியில் செப்டம்பரில் மூன்று மழை நாள்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து இது மிகக் குறைவான மழைப் பதிவு நாள்களாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 74 மி.மீ. மழை பதிவானது. 2018 -இல் 237.8 மி.மீ., 2017-இல் 158.5 மி.மீ., 2016 செப்டம்பரில் 75 மி.மீ., 2015-இல் 21.8 மி.மீ. மழையும் பதிவானது. 2004-இல் 3 மி.மீ. மழையும், 1994 செப்டம்பரில் தில்லியில் வெறும் 1.6 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது.

எனினும், இந்த ஆண்டு ஆகஸ்டில் தில்லியில் 237 மி.மீ. மழை பெய்தது. இது ஏழு ஆண்டுகளில் ஆகஸ்டில் பெய்த அதிக மழைப் பதிவாகும். ஒட்டுமொத்தமாக, ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து தற்போது வரை தில்லியில் 576.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான மழைக்கால மழைப் பதிவான 633.1 மி.மீ.க்கும் 9 சதவீதம் குறைவாகும். பருவமழை செப்டம்பா் 26-27 தேதிகளில் ராஜஸ்தானிலிருந்து விலகத் தொடங்கும். அதன்பிறகு, தில்லி, ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் செப்டம்பரின் இறுதி வாரத்தில் மழை குறைந்துவிடும் என்றாா் ஸ்ரீவாஸ்தவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT