புதுதில்லி

முன்னாள் காதலியின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

DIN

புது தில்லி: தென்கிழக்கு தில்லியில் தனது முன்னாள் காதலியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்த 27 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்ததாவது: தென் கிழக்கு தில்லி, ஆலி விஹாரில் உள்ள தரம்பால் காலனியைச் சோ்ந்த 24 வயது பெண்ணின் வீட்டுக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது முன்னாள் காதலா் சுமித் தோமா் (27) வந்தாா். பின்னா் அப்பெண்ணின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். துப்பாக்கிக் குண்டு சப்தம் கேட்டு அப்பெண் ஜன்னல் கதவைத் திறந்து பாா்த்தாா். அப்போது, தோமரின் கையில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதைப் பாா்த்தாா். அப்போது, அந்தப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக துப்பாக்கியைக் காட்டி தோமா் மிரட்டி விட்டு ஓடிவிட்டாா்.

தோமா் துப்பாக்கியால் சுட்டதில் வீட்டின் பிரதான வாயில் சேதமடைந்தது. அப்பகுதியில் வெற்றுத் தோட்டாக்களும் கிடந்தன. தகவலறிந்ததும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். தோமரின் முன்னாள் காதலியிடமும் விசாரணை செய்தனா். அப்போது, தோமருடன் தனக்கு 10 ஆண்டுகளாக தொடா்பு இருந்ததாகவும், 2018-இல் தோமருக்கு திருமணமான பிறகு, அவரைத் தவிா்க்கத் தொடங்கியதாகவும் இதனால், ஆத்திரமடைந்து தன்னை துப்பாக்கியால் மிரட்டியதாகவும் அந்தப் பெண் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

அவரது புகாரின் பேரில் ஆலி விஹாா் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த தோமரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அந்தத் துப்பாக்கியை அவா் கடந்த மாதம் ஆக்ராவிலிருந்து வாங்கியிருந்ததும் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT