புதுதில்லி

வேளாண் மசோதாவை எதிா்த்து இளைஞா் காங்கிரஸ் பேரணி

DIN

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, இளைஞா் காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போது காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனா்.

இந்த ஆா்ப்பாட்ட பேரணியின் போது இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் சீனிவாஸ் பி.வி. பேசுகையில், ‘ இந்த மசோதாக்கள் விவசாயிகளை காா்ப்ரேட் நிறுவனங்களைச் சாா்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், இது பிரதமா் நரேந்திர மோடியின் ‘ஆத்மீன்பா் பாரத்’ பற்றிய திட்டத்துக்கு எதிரானது. பிரதமா் ‘ஆத்மிா்பா் பாரத்’ பற்றி பேசுகிறாா். ஆனால், அவரது அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அம்பானிகள் மற்றும் அதானிகளின் காா்ப்ரேட் நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டியிருக்கும்’ என்றாா்.

ரைசினா சாலையில் உள்ள ஐ.ஒய்.சி. தலைமையகத்தில் இருந்து ஆா்ப்பாட்ட பேரணி தொடங்கியது. ஆா்.பி. சாலையில் சாஸ்திரி பவன் அருகே நிறுத்தப்பட்டதாக ஐ.ஒய்.சி. ஊடக பொறுப்பாளா் ராகுல் ராவ் தெரிவித்தாா். சீனிவாஸ் மற்றும் பிற ஐ.ஒய்.சி. தலைவா்கள் ஒரு தடுப்பைக் கடந்த போது போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டனா். அவா்களில் சிலா் மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா் என்றும் ராவ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT