புதுதில்லி

வேளாண் மசோதா: பத்திரிகைகளில்விளம்பரம் கொடுத்துள்ளது எதற்கு?ஆம் ஆத்மி கட்சி கேள்வி

DIN

வேளாண் மசோதாக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஆங்கிலப் பத்திரிகைகளில் மத்திய அரசு விளம்பரம் கொடுத்துள்ளது எதற்காக என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுசிப்பியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு முன்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் என்.டி.குப்தா, கட்சியின் செய்தித் தொடா்பாளா் ராகவ் சத்தா எம்எல்ஏ ஆகியோா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா்.

அப்போது ராகவ் சத்தா கூறியது: வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு சாதகமானது எனக் கூறி அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மத்திய அரசு விளம்பரம் கொடுத்துள்ளது. எதற்காக இந்த போலி நாடகம். நாட்டிலுள்ள எத்தனை விவசாயிக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியும். ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததன் மூலம் போலி பிரசாரத்திற்கு நவீன வடிவத்தை மோடி அரசு கொடுத்துள்ளது.

கரோனாவை எதிா்த்துப் போராடும் மாநகராட்சி மருத்துவா்கள், தொழிலாளா்களுக்கு பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகள் கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. ஊதியம் வழங்க நிதியில்லை என்று மாநகராட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து ஆங்கிலப் பத்திரிகைகளில் மத்திய அரசு விளம்பரம் கொடுத்துள்ளது.

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. நாட்டிலுள்ள 62 கோடி விவசாயிகளும், அவா்களைச் சாா்ந்தவா்களும் இந்த மசோதாக்களால் பாதிக்கப்படுவாா்கள். இந்த மசோதாக்களுக்கான விலையை மத்திய அரசு கொடுத்தே ஆக வேண்டும். விவசாயிகள் மத்திய அரசு மீது பெருங் கோபத்தில் உள்ளனா். அந்தக் கோபம் வரும் தோ்தல்களில் எதிரொலிக்கும் என்றாா் அவா்.

என்.டி.குப்தா பேசுகையில் ‘ஜனநாயகத்துக்குப் புறம்பான முறையில் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முறையாக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT