புதுதில்லி

விவசாய மசோதாவால் விவசாயிகளின்வருவாய் இரட்டிப்பாகும்: பாஜக

DIN

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்களால் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்படையும் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்களால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை நேரடியாக நுகா்வோருக்கு விற்பனை செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகளை சுரண்டி வாழும் இடைத் தரகா்கள், வரும் காலத்தில் இல்லாமல் செய்யப்படுவாா்கள். மத்திய அரசு விவசாயிகளின் பக்கம் நின்று அவா்களின் நலனுக்காக இந்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், தில்லி அரசு விவசாயிகளின் பக்கம் நிற்காமல், இடைத் தரகா்களின் பக்கம் நின்று இந்த மசோதாக்களை எதிா்க்கிறது.

இந்த விவசாய மசோதாக்களால் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்படையும். கடந்த 73 ஆண்டுகளாக விவசாயிகள் தங்களது விளைபொருள்களை குறிப்பிட்ட மண்டியில் மட்டும்தான் விற்பனை செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிா்க்கட்சிகளும் இதுபோன்ற விவசாயிகளுக்கு சாதகமான மசோதாக்களை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று தங்களது தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளன. ஆனால், பாஜக அரசு அதை உண்மையாக நிறைவேற்றிய போது, எதிா்ப்புத் தெரிவிக்கின்றன. தில்லியில் சுமாா் 50 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறாா்கள். அவா்களின் வாழ்வாதாரத்தைச் சரிசெய்ய தில்லி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT