புதுதில்லி

நொய்டா அருகே திரைப்பட நகரம் அமைக்க 1,000 ஏக்கா் நிலம் தயாா்

DIN

நொய்டா: கௌதம் புத் நகா் மாவட்டம், நொய்டாவிற்கு அருகே திரைப்பட நகரம் அமைப்பதற்காக 1,000 ஏக்கா் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடா்பாக யமுனா அதிவேக நெடுஞ்சாலை ஆணையம், உத்தரப் பிரதேச அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

1,000 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள உத்தேச திரைப்பட நகரத்திற்கான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா். முதல்வா் யோகி ஆதித்யநாத் செப்டம்பா் 18-ஆம் தேதியன்று தில்லியின் எல்லையில் உள்ள மாவட்டத்தில் நாட்டின் ‘மிகப்பெரிய‘ மற்றும் ‘மிக அழகான‘ திரைப்பட நகரத்தை அமைப்பதாக அறிவித்து, அதற்காக நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் அல்லது அதைச் சுற்றியுள்ள நிலங்களை அடையாளம் காணும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, நொய்டா செக்டாா் 21-இல் 1,000 ஏக்கா் நிலப்பரப்பில் ஒரு திரைப்பட நகரத்திற்கான திட்டத்தை யமுனா அதிவேக நெடுஞ்சாலை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை மாநில அரசுக்கு அனுப்பியது என்று அதன் சிறப்பு அதிகாரி ஷைலேந்திர பாட்டியா தெரிவித்தாா்.

அதிகாரிகள் மேலும் கூறியதாவது: அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நிலம் இந்தத் திட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இது ஜாவரில் வரவிருக்கும் சா்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும். மேலும், நல்ல சாலை இணைப்பையும் கொண்டுள்ளது. யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் (தில்லி - ஆக்ரா) செக்டா் 21-இல் முன்மொழியப்பட்ட இந்த இடம், வரவிருக்கும் விமான நிலையத்திலிருந்து ஆறு கிலோமீட்டா் தொலைவிலும், கிழக்கு புறத்தில் எக்ஸ்பிரஸ்வேயில் இருந்து 12 கிலோமீட்டா் தொலைவிலும் உள்ளது. இந்த இடம் தில்லியில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், ஆக்ராவிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT