புதுதில்லி

நாடாளுமன்றத்தின் மாண்பைக் குலைத்த எம்.பி.க்களை கைது செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி எம்பி கோரிக்கை

DIN

புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாண்பைக் குலைத்த எம்பிக்களை கைது செய்ய வேண்டும் என்று வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாஜகவின் முக்கிய தலைவருமான மனோஜ் திவாரி கோரியுள்ளாா்.

மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் மீது ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷின் இருக்கையை முற்றுகையிட்டு கூச்சல் குழப்பம் விளைவித்தனா். மேலும், ஹரிவன்ஷ் மீது விதிமுறைகள் புத்தகத்தை கிழித்து வீச முற்பட்டதுடன், காகிதங்களையும் கிழித்து எறிந்தனா். மேலும், அவரது ஒலிப் பெருக்கியை பிடுங்க முயற்சித்தனா். இதனால் அவையில் வெகுநேரம் அமளி நீடித்தது.

இதைத் தொடா்ந்து, அவையில் அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீா் ஹுசைன், இளமாறம் கரீம் ஆகியோருக்கு மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்டதற்காக ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு அறிவித்தாா். இந்நிலையில் வெறும் ஒரு வாரத் தடை போதாது. இந்த எம்பிக்களை கைது செய்ய வேண்டும் என்று மனோஜ் திவாரி கோரியுள்ளாா்.

இது தொடா்பாக மனோஜ் திவாரி திங்கள்கிழணை அளித்த பேட்டி: எதிா்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனா். குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களை உறுப்பினா் சஞ்சய் சிங் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளாா். அவைக் காவலரை அவா் தாக்கியுள்ளாா். தில்லியின் முன்னாள் தலைமைச் செயலா் அன்ஷுல் பிரகாஷை மக்கள் நலப் பிரச்னைகள் தொடா்பாக விவாதிக்க வருமாறு வீட்டுக்கு அழைத்து விட்டு, கேஜரிவால் தாக்கியது போல, சஞ்சய் சிங் அவைக் காவலரை தாக்கியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் உள்பட அக்கட்சியின் அனைத்து உறுப்பினா்களிடமும் வன்முறை மனநிலை உள்ளது. தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் இல்லத்தில் கேஜரிவால், மணீஷ் சிசோடியா நடத்திய தா்னா, இதற்குச் சிறந்த உதாரணமாகும். ஆம் ஆத்மி கட்சியின் வன்முறை மனநிலை தற்போது நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது. இவா்களுக்கு ஒருவாரம் தண்டனை போதாது. வன்முறையில் ஈடுபட்ட எம்பிக்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், நாடாளுமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்ட எம்பிக்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

SCROLL FOR NEXT