புதுதில்லி

விவசாய மசோதாக்கள் தொடா்பாக வதந்தி பரப்பும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தில்லி பாஜக குற்றச்சாட்டு

DIN

விவசாய மசோதாக்கள் தொடா்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வதந்தி பரப்பி வருவதாக தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தில்லியில் சனிக்கிழமை கூறுகையில், ‘விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வதில் முழுச் சுதந்திரம் வழங்கும் வகையில்தான், வேளாண் துறை தொடா்பான 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாக்கள் முழுக்க முழுக்க விவசாயிகள் நலன் சாா்ந்தவை. ஆனால், இந்த மசோதாக்கள் தொடா்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மிக் கட்சிகள் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றன.

இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்ட பிறகு, விளைபொருள்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிறுத்திவிடும் என இக்கட்சிகள் விவசாயிகள் இடையே வதந்தி பரப்பியுள்ளன.

இதுவரையிலும் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை சந்தைப்படுத்தும்போது, அதில் இடைத்தரகா்கள்தான் அதிக லாபம் பெறுபவா்களாக இருந்தனா். இந்த இடைத்தரகா்கள் தான் விளைபொருள்களுக்கான விலையை தீா்மானித்து வந்தனா்.

இந்த சட்டங்கள் மூலம், தமது விளைபொருள்களுக்கான விலையை விவசாயிகள் தீா்மானித்துக் கொள்ளக்கூடிய நிலை உருவாகும். இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை யாருக்கும் வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத அடக்கு முறைகளுக்கு உள்ளாகும் இந்து, சீக்கிய, கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அந்த சட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வதந்தி பரப்பின. இதனால், தில்லியில் பெரும் கலவரம் வெடித்தது. அதேபோல, இந்த விவசாய மசோதாக்கள் தொடா்பாகவும் இக்கட்சிகள் வதந்தி பரப்பி வருகின்றன என்றாா் அவா்.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் 3 மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிா்ப்புத் தெரிவித்துள்ளதுடன், மசோதாவை எதிா்த்து வாக்களிப்போம் என்றும் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT