புதுதில்லி

தில்லியில் வட வானிலையில் புழுக்கம் அதிகரிப்பு

DIN

தில்லியில் மழையில்லாதாதலும், வறண்ட வானிலையாலும் சனிக்கிழமை புழுக்கமான சூழல் நிலவியது. பகலில் வெயிலின் தாக்கமும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதே நிலை அடுத்த மூன்று நாள்களுக்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த 11 தினங்களுக்கு முன்பு மிதமான மழை இருந்து வந்தது. வானம் மேகமூட்டமாகவும் இருந்தது. இந்த நிலையில், கடந்த இரு வாரமாக மழை இல்லை. இதனால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.

புழுக்கமும் இரவில் அதிகரித்து வருகிறது. இதனால், வீடுகளில் குளிரூட்டும் மின்சாதனப் பொருள்களின் பயன்பாடும்

அதிகரித்துள்ளது. சனிக்கிழமை புழுக்கம் அதிகரித்திருந்தது. பகலில் வெயிலின் தாக்கம் 36 டிகிரிக்கு மேல் 40 டிகிரி செல்சியருக்கு கீழ் என்ற அளவில்இருந்தது.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி அதிகரித்து 37.3 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி அதிகரித்து 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 77 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 52 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

தில்லியில் செப்டம்பரில் இதுவரை 20.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. முன்பு இந்த மாதத்தில் 72.6 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால், இந்த முறை மழைப் பொழிவு இதுவரை 78 சதவீதம் குறைந்து காணப்படுவதாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரம்: தில்லியில் சனிக்கிழமை ஒட்டுமொத்த காற்றின்தரக் குறியீடு மாலையில் 117 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. ஞாயிற்றுக்கிழமையும் காற்றின் தரம் மிதமான பிரிவிலேயே நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT