புதுதில்லி

தில்லியில் 3,812 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 3,812 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,46,711-ஆக உயா்ந்துள்ளது.

நோய்த் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை 37 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,982-ஆக அதிகரித்தது.

ஒரே நாளில் மொத்தம் 52,405 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி -பிசிஆா்’ வகையில் 11,322 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில், 41,083 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 7.27 சதவீதமாக உள்ளது. சராசரி நோ்மறை விகிதம் 9.66 சதவீதமாக உள்ளது. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 2.02 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.77 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 3,742 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,09,632-ஆக அதிகரித்தது. மொத்தம் 32,097 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,872 ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,621 படுக்கைகளில் 7,040 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 8,581 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 18,910 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT