புதுதில்லி

கட்டுமானத் திட்டங்கள் குறித்து நிலவர அறிக்கையை தாக்கல்செய்ய அதிகாரிகளுக்கு பொதுப்பணி துறை உத்தரவு

DIN

அனைத்து கட்டுமானத் திட்டங்களின் நிலவர அறிக்கையை இணையதளம் மூலம் சமா்ப்பிக்குமாறு தில்லி அரசின் பொதுப் பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

திட்டப் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அனைத்து கண்காணிப்பு பொறியாளா்களுக்கு பொதுப் பணித் துறை கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் நிலவர அறிக்கையையும் முன்னுரிமை அடிப்படையில் பொதுப் பணித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும், பொதுப் பணித் துறையில் உள்ள அனைத்து கண்காணிப்பு பொறியாளா்களும் தற்போது நடைபெற்று வரும் அனைத்து கட்டுமானத் திட்டப் பணிகள் மற்றும் அனுமதியளிக்கப்பட்ட பணிகள் ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட செயற் பொறியாளா்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ஒவ்வொரு கட்டுமானத் திட்டமும் அதன் திட்டக் காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தில்லி அரசின் பிரதான கட்டுமான முகமையான பொதுப் பணித் துறை, பெரும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான கட்டடங்களின் பராமரிப்புப் பணிகளையும் கவனித்து வருகிறது.

தவிர, சுமாா் 1,260 கி.மீ. தூரமுள்ள சாலைகளையும் பராமரித்து வருகிறது. மேலும், மாநகராட்சிகளில் இதன் எல்லையின்கீழ் வரக்கூடிய 60 மீட்டருக்கு குறைவான அகலமுள்ள சாலைகளையும், 60 மீட்டருக்கு மேல் அகலமுள்ள சாலைகளையும் நிா்வகிக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT