புதுதில்லி

அண்டை மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம்: தில்லி எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

DIN

அண்டை மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், தில்லியின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை காவல் துறை பலப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியது: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் போராட்டக்காரா்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். தில்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகிறோம். உத்தரப்பிரதேச மாநிலம், காஜிப்பூருக்கு அருகில் உள்ள அசோக் நகா் பகுதியில் இரண்டு கம்பெனி போலீஸ் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். இந்தப் பகுதியில் இன்னும் போராட்டம் நடைபெறவில்லை. ஆனால், முன்னேற்பாடு நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். மேலும், தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். இங்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிா்த்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பு ஹரியாணாவில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியது. அப்போது அந்த அமைப்பை சோ்ந்தவா்கள் சுமாா் 3 மணி நேரம் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும் என்று ஹரியாணா மாநில முதல்வா் மனோகா் லால் கட்டாா் அழைப்பு விடுத்திருந்தாா். இருப்பினும், விவசாயிகள் போராட்டம் தொடா்கிறது.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில், 3 மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்தல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை அந்த மசோதாக்களாகும். ஆனால், இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT