புதுதில்லி

தில்லியில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

DIN

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை ஒரே நாளில் 4,071 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,42,899 ஆக உயா்ந்துள்ளது.

நோய்த் தொற்றால் சனிக்கிழமை 38 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,945-ஆக அதிகரித்தது.

ஒரே நாளில் மொத்தம் 61,973 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 10,681 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில், 51,292 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 6.57 சதவீதமாக உள்ளது. சராசரி நோ்மறை விகிதம் 9.75 சதவீதமாக உள்ளது. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 2.04 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.74 சதவீதமாக உள்ளது.

சனிக்கிழமை 4,219 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,05,890 ஆக அதிகரித்தது. மொத்தம் 32,064 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.

தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,820 ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,996 படுக்கைகளில் 7,043 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 7,953 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 18,648 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT