புதுதில்லி

தென்கிழக்கு தில்லியில் கத்தியால் குத்தியதில் துப்புரவுப் பணியாளா் காயம்

DIN


புது தில்லி: தென் கிழக்கு தில்லியின் ஜாமியா நகா் பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டதில் கத்தியால் குத்தியதில் 30 வயது துப்புரவுப் பணியாளா் காயமடைந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: நேரு நகரைச் சோ்ந்தவா் சோன்பால். ஜாமியா நகரில் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணியளவில், சோன்பால் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ​ துப்புரவுப் பணி தொடா்பாக ஜாமியா நகரில் வசிக்கும் முகமது ஷிராஸ் (28) என்பவருக்கும், சோன்பாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சோன்பாலை ஷிராஸ் கத்தியால் குத்தினாா். இதில் சோன்பாலின் கழுத்து, வலது கையில் காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக ஹோலி பேமிலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். புகாரின் பேரில் ஜாமியா நகா் காவல் நிலையத்தில் ஷிராஸுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஷிராஸ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT