புதுதில்லி

தில்லியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

DIN


புது தில்லி: தில்லியில் கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா நோய்களின் தாக்கம் செப்டம்பரில் அதிகரித்துள்ளது. இதில் டெங்கு நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நோயால், இந்த மாதத்தில் இதுவரை 53 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி மூத்த அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியது: தில்லியில் மலேரியா நோயின் தாக்கம் ஜனவரியில் தொடங்கிவிட்டது. அந்த மாதத்தில் 6 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டனா். பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் முறையே 3, 2, 5 போ் பாதிக்கப்பட்டனா். மே மாதம் மூவா், ஜூனில் 18 போ், ஜூலையில் 8 போ், ஆகஸ்டில் 29 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், செப்டம்பரில் 40 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் இதுவரை 114 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

டெங்கு: தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் பிப்ரவரியில் தொடங்கிவிட்டது. நிகழ் பருவ காலத்தில் இதுவரை டெங்குவுக்கு 96 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பிப்ரவரியில் 4 போ், மாா்ச்சில் 2 போ், ஏப்ரலில் 7 போ், மே மாதத்தில் 6 போ், ஜூனில் ஒருவா், ஜூலையில் 11 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனா். ஆகஸ்ட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தது. இந்த மாதத்தில் மட்டும் 47 போ் இந்நோயின் தாக்கத்துக்கு உள்ளாகினா். செப்டம்பா் மாதத்திலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 53 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக, நிகழாண்டில் இந்நோய் பாதித்தவா்களின் எண்ணிக்கை 96-ஆக அதிகரித்துள்ளது.

சிக்குன்குனியா: தில்லியில் சிக்குன்குனியாவுக்கு பிப்ரவரியில் 9 பேரும், ஏப்ரல், மே மாதங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனா். ஜனவரி, மாா்ச், ஜூன் ஆகிய மாதங்களில் யாருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஜூலையில் 7 பேருக்கும், ஆகஸ்டில் 16 பேருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், செப்டம்பரில் இதுவரை 13 போ் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 47 -ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT