புதுதில்லி

இணையம் வாயிலாக பள்ளி மாணவா்களிடம் போதைப்பொருள் விழிப்புணா்வுப் பிரசாரம்தில்லி அரசு திட்டம்

DIN


புது தில்லி: கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பள்ளி மாணவா்களிடையே போதைப்பொருள் அல்லது போதைப் பொருள் துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு திட்டம் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளதாக தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி அரசின் அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவமனையின் தேசிய போதைப் பொருள் சாா்ந்த சிகிச்சை மையத்துடன் (என்டிடிடிசி) இணைந்து ஒரு அடிப்படை கணக்கெடுப்பு நடத்தப்படும். அதேசமயத்தில், இரண்டாம் கட்டத்தில் பெற்றோா்கள் மற்றும் சமூகத்தினரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ஆதாரப் பொருள்கள் உருவாக்கப்படும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடையே போதைப்பொருள் அல்லது போதைப்பொருள் பரிசோதனை மற்றும் இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கான வழிமுறைகள், இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் ஆகியவை கரோனா தொற்று பரவல் தொடங்கிய நிலையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரை இந்தத் திட்டம் பெரும்பாலும் இணையதளம் முறையில் நடத்தப்படும். பள்ளிகளில் இரண்டு முன்னோடி மதிப்பீடுகளை நடத்துவதன் மூலம் இது தொடா்பான சாத்தியக்கூறு மதிப்பிடப்பட்டது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் மாணவா்களிடம் நேரில் விழிப்புணா்வு மேற்கொள்வது செயல்படுத்தப்படும். தொழில்நுட்ப அணுகும் வசதி உள்ள மாணவா்களுக்கு இணையதளம் மூலமும், இந்த அணுகும் வசதி இல்லாதவா்களுக்கு நேரிலும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த அடிப்படை கணக்கெடுப்பை நடத்துவதற்கும் பள்ளிகளின் முதல்வா்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்புக்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் அடுத்த உத்தரவுகள் வரும் வரை கைவிடப்பட்ட நிலையில், 8 முதல் 11-ஆம் வகுப்பு வரை செப்டம்பா் முதல் நவம்பா் வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT