புதுதில்லி

2 கிட்டங்கிகளில் தீ விபத்து

DIN


புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் வியாழக்கிழமை அதிகாலை இரண்டு கிட்டங்கிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நெகிழியால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: நொய்டா அருகே தாத்ரி பகுதியில் உள்ள சித்தாரா கிராமத்தில் உள்ள இந்தக் கிட்டங்கிகளில் அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரு சில மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஒரு கிட்டங்கியில் மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ அருகில் உள்ள மற்றொரு கிட்டங்கிற்கு பரவியது. கிட்டங்கிகளில் நுரை மற்றும் நெகிழியால் தயாரிக்கப்பட்ட பொருள்களும், செல்லிடப்பேசி உறைகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த தீ விபத்தில் அவை சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT