புதுதில்லி

தில்லியில் புதிததாக 4,432 பேருக்கு கரோனா!

18th Sep 2020 12:17 AM

ADVERTISEMENT


புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை ஒரேநாளில் 4,432 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,34,701ஆக உயா்ந்துள்ளது.

நோய்த் தொற்றால் வியாழக்கிழமை 38 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,877-ஆக அதிகரித்தது. தில்லியில் வியாழக்கிழமை 60,014 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 9,564 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில், 50,450 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 7.38 சதவீதமாக உள்ளது. சராசரி நோ்மறை விகிதம் 9.90 சதவீதமாக உள்ளது. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 2.08 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.68 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வியாழக்கிழமை 3,587 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,98,103ஆக அதிகரித்தது. மொத்தம் 31, 721 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,670 ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,652 படுக்கைகளில் 6,893 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 7,759 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 18,038 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாதிப்பு அதிகரிக்கலாம்’: இதற்கிடையே, தில்லியில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: தில்லியில் கரோனா பரிசோதனையை 4 மடங்காக அதிகரித்துள்ளோம். இதனால், வரும் 10-15 நாள்களுக்கு தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கலாம். அதிகளவு கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அவா்களை தனிமைப்படுத்துவதன் மூலம், மற்றவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். இதனால், தில்லிக்கு நோ்மறையான முடிவகளே கிடைக்கும். தில்லியில் கரோனா உயிரிழப்பு விகிதம் கடந்த 10 நாள்களில் மிகவும் குறைவடைந்து 0.7 சதவீதமாகவே உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் 14,521 படுக்கைகள் உள்ளன. இதில், 50 சதவீதமான படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும், தனியாா் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் 80 சதவீதமான படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT