புதுதில்லி

வடகிழக்கு தில்லி கலவரம்: முகநூல் நிறுவனம் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய தில்லி பேரவை குழு கோரிக்கை

1st Sep 2020 12:30 AM

ADVERTISEMENT

புது தில்லி: வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக முகநூல் (ஃபேஸ் புக்) நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை ( எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை அமைதி- நல்லிணக்க குழு திங்கள்கிழமை வலியுறுத்தியது.

வடகிழக்கு தில்லி கலவரத்தை தூண்டும் வகையில், முகநூலில் சிலா் பதிவிட்ட பதிவுகளை அந்நிறுவனம் நீக்கவில்லை என்றும், இதனால், வடகிழக்கு தில்லி கலவரத்தை மறைமுகமாக தூண்டும் வகையில் முகநூல் நிறுவனம் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டி, இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்க குழு சில தினங்களாக விசாரித்து வருகிறது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிலரிடம் அக்குழு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

அதன்பிறகு, அந்தக் குழுவின் தலைவரும், தில்லி ராஜேந்தா் பிளேஸ் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ராகவ் சத்தா தில்லியில் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

ஆரம்ப கட்ட விசாரணையில், தில்லி கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்ட பதிவுகள் கலவரத்தை தூண்டும் வகையில் இருந்தது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பதிவுகளை நீக்க முகநூல் நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வடகிழக்கு பகுதியில் வன்முறை தூண்டப்பட்டது,

வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக முகநூல் நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT