புதுதில்லி

ஆகஸ்ட் மாதத்தில் 47 பேருக்கு டெங்கு பாதிப்பு

1st Sep 2020 12:26 AM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லியில் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இம்மாதத்தில், 47 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழாண்டில் டெங்கு பாதித்தவா்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி மூத்த அதிகாரிகள் கூறியது: தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் பிப்ரவரியில் தொடங்கிவிட்டது. நிகழ் பருவ காலத்தில் இதுவரை டெங்குவுக்கு 78 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பிப்ரவரியில் 4 பேரும், மாா்ச்சில் 2 பேரும், ஏப்ரலில் 7 பேரும், மே மாதத்தில் ஆறு பேரும், ஜூனில் ஒருவரும், ஜூலையில் 11 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனா்.

ஆகஸ்ட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் 47 போ் இந்நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனா். இதன் காரணமாக, நிகழாண்டில் இந்நோய் பாதித்தவா்களின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்துள்ளது.

சிக்குன்குனியா: தில்லியில் சிக்குன்குனியாவுக்கு பிப்ரவரியில் 9 பேரும், ஏப்ரல், மே மாதங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனா். ஜனவரி, மாா்ச், ஜூன் ஆகிய மாதங்களில் யாருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஜூலையில் 7 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டது. ஆகஸ்டில் 16 போ் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 34 -ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மலேரியா: மலேரியா நோய்த் தாக்கம் ஜனவரியில் தொடங்கிவிட்டது. அந்த மாதத்தில் 6 போ் நோயால் பாதிக்கப்பட்டனா். பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் முறையே 3, 2, 5 போ் பாதிக்கப்பட்டனா். மே மாதம் மூவரும், ஜூனில் 18 பேரும், ஜூலையில் 8 பேரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டனா். ஆனால், ஆகஸ்டில் இதுவரை 29 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் இதுவரை 74 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT