புதுதில்லி

என்.கே.சிங் தலைமையிலான 15 வது நிதி ஆணையம் அறிக்கையை இறுதி செய்தது

DIN

என்.கே.சிங் தலைமையிலான 15வது நிதி ஆணையம் தனது ஆலோசனைகளை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தது.

மத்திய - மாநில அரசுகளின் நிதிகளை மதிப்பிடு செய்து, வரி வருவாயை மத்திய- மாநில அரசுகள் பிரித்துக்கொள்வதற்கான கொள்கைகளை வகுப்பது நிதி ஆணையத்தின் தலையான பொறுப்பு. இதற்கு அனைத்து மட்டங்களிலும் வரிவான ஆலோசனைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் கூட்டாட்சி கொள்கையை பலப்படுத்துவதும், மத்திய மாநிலங்களின் செலவுகளின் தரத்தை மேம்படுத்தி நிதி மேம்படுத்துவதற்கான சிபாரிசுகளை கொடுப்பதற்கு இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது. 1951 ஆம் ஆண்டு முதல் இது வரை நாட்டில் 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 15 ஆவது நிதி ஆணையம் 2017 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் அமைக்கப்பட்டது.

2020-21ம் ஆண்டுக்கான முதல் கட்ட அறிக்கையும் இறுதி அறிக்கை 2021 முதல் 2026-ம் நிதி ஆண்டுகளுக்கான அறிக்கை குறித்த ஆலோசனைகளையும் வழங்கவும் அரசியல் சாசனத்திற்கு உள்பட்டு குடியரசுத்தலைவரால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. என்.கே. சிங் தலைமையிலான 15வது நிதி ஆணையம் வெள்ளிக்கிழமை நிறைவு செய்தது. இந்த அறிக்கையில் என்.கே.சிங் மற்றும் ஆணையத்தின் உறுப்பினா்கள் அஜய் நாராயணன் ஜா, பேராசிரியா் அனூப் சிங், டாக்டா் அசோக் லகிரி, டாக்டா் ரமேஷ் சந்த் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இந்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்ய நிதி ஆணையம் கால அவகாசம் கேட்டிருந்தது. இதையடுத்து, இந்த அறிக்கை 2020 நவம்பா் 9- ஆம் தேதி தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் நகலை பிரதமரிடம், நிதி ஆணையம் அடுத்த மாத இறுதியில் வழங்கும். இந்த அறிக்கையையும் இதன் மீது எடுக்கப்பட்ட செயல் நடவடிக்கை அறிக்கையுடன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவாா். இந்த அறிக்கையில் 2021-22 முதல் 2025-26ம் ஆண்டு வரை 5 நிதியாண்டுகளுக்கான பரிந்துரைகள் இடம் பெற்றிருக்கும். 2020-21ம் ஆண்டுக்கான 15வது நிதி ஆணைய அறிக்கை, குடியரசுத் தலைவரிடம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பா் மாதம் அளிக்கப்பட்டது. அதன்பின் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தின் பங்காக ரூ.35,823 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

முந்தைய நிதி அறிக்கையிலிருந்து 15 - வது நிதி அறிக்கை பல்வேறு வகையில் வேறுபட்டு இருக்கும் என்றும் நிதியமைச்சக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மாநிலங்களின் வருவாய், பரப்பளவு போன்றவைகளோடு மக்கள் தொகை (கட்டுப்படுத்த) செயல்திறன், வனம் மற்றும் சூழலியல் பாதுகாப்பு, வரி மேலாண்மை போன்றவைகளிலும் மதிப்பீடுகள் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க வழி காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த இரு ஆண்டுகளாக 15வது நிதி ஆணைய குழு மாநில அரசுகள், உள்ளாட்சி நிா்வாகங்கள், முன்னாள் நிதி ஆணைய உறுப்பினா்கள் உட்பட பல தரப்பினருடன் விரிவாக ஆலோசனைகளை நடத்தி தனது அறிக்கையை இறுதி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT