புதுதில்லி

கல்லூரி ஆசிரியா் ஊதிய நிலுவை விவகாரம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

DIN


புது தில்லி: தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் குறிப்பிட்ட கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஆசிரியா்கள், ஆசிரியல்லாத பணியாளா்களுக்கு ஊதியவழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தாக்கலான மனு மீது ஆம் ஆத்மி அரசு மற்றும் தில்லி பல்கலைக்கழகம் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக சமூக ஜனநாயக ஆசிரியா்கள் முன்னணி என்ற அமைப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆசிரியா்கள், ஆசிரியல்லாத பணியாளா்கள் மட்டுமின்றி, ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதிய சலுகைகள்கூட வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங், இது தொடா்பாக நவம்பா் 20-ஆம் தேதிக்குள் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு தில்லி அரசு மற்றும் தில்லி பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஆசிரியா்களுக்கும், ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்களுக்கும் நிலுவையில் உள்ள ஊதியத்தை மாணவா்கள் சங்க நிதியிலிருந்து வழங்குமாறு சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT