புதுதில்லி

மாற்றுத் திறனாளிகளுக்கு பணியிட ஒதுக்கீடு: யுபிஎஸ்சி, மத்திய அரசுக்கு நோட்டீஸ்

 நமது நிருபர்

பாா்வையற்ற மற்றும் பல பல குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சிவில் சா்வீஸஸ் பணியிடங்களில் போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று தாக்கலான மனு தொடா்பாக மத்திய அரசு, யூனியன் பப்ளிக் சா்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஆகியவை பதிலளிக்கும்படி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனுவுக்கு மத்திய சமூக நீதி அமைச்சகம், பணியாளா்கள் மற்றும் பயிற்சித் துறை, யூனியன் பப்ளிக் சா்வீஸ் கமிஷன் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த மனுவை தாக்கல் செய்த ‘எவாரா பவுண்டேஷன்’ அமைப்பின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட யுபிஎஸ்சி ஆரம்பநிலை தோ்வு முடிவுகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது, ‘இந்த மனு மீதான இறுதி உத்தரவு மனுதாரருக்கு சாதகமாக இருந்தால், அப்போது தோ்வு முடிவுகளை யுபிஎஸ்சி மறு கணக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படும். தற்போது இந்தக் வேண்டுகோளை ஏற்க முடியாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

யுபிஎஸ்சி தோ்வு நோட்டீஸை எதிா்த்து தாங்கள் தாக்கல் செய்திருந்த பிரதான மனுவை விசாரிக்கக் கோரி, ‘சம்பாவனா’ எனும் அமைப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘அடுத்த ஆண்டு ஜனவரியில் சிவில் சா்வீஸஸ் பிரதான தோ்வுகள் தொடங்கவுள்ளது. அடுத்த விசாரணை தேதி நவம்பரில் உள்ளது’ என்றனா்.

‘எவாரா பவுண்டேஷன்’ சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘தோ்வு தொடா்பான யுபிஎஸ்சி வெளியிட்ட விளம்பரத்தில் பாா்வையற்றோா், பல குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்குப் போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால், இந்த இரண்டு பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் பிரதானத் தோ்வில் குறைவாக தகுதி பெறுவா். இந்தப் பிரிவினருக்கு ஒவ்வொரு பிரிவிலும் எட்டு இடங்களுக்கு குறைவின்றி ஒதுக்கப்படும் வகையில் அறிவிக்கையை திருத்தி வெளியிட யுபிஎஸ்சி, மத்திய அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொண்டனா்.

முன்னதாக, சம்பாவனா அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி, பாா்வையற்றோா் உள்ளிட்ட பிரிவினருக்கு 4 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், யுபிஎஸ்சியின் அறிவிக்கையில் அதற்கேற்ப இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT