புதுதில்லி

வெளிநாட்டு பயணம், விசா கட்டுப்பாடுகளை தளா்த்தியது மத்திய அரசு

 நமது நிருபர்

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுப் பரவலை முன்னிட்டு வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை தளா்த்துவதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

அதேசமயம் மின்னணு விசாக்கள் (எலக்ட்ரானிக் விசா), சுற்றுலா, மருத்துவம் தொடா்பான விசாக்களுக்கு கட்டுப்பாடுகள் தொடா்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு, சா்வதேச பயணிகளின் இந்தியா வருவதைக் குறைக்க, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. எட்டு மாதங்களுக்கு பின்னா் தற்போது தளா்வை வழங்க முடிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள்(ஓசிஐ), வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவழியினா் அதற்கான அடையாள அட்டையை பெற்றுள்ளவா்களுக்கும் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளும் தளா்த்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் வா்த்தகம். மாநாடுகள், வேலைவாய்ப்புகள், கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினா் அனைவருக்கும் விசா அனுமதிக்கப்படுவதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வந்தே பாரத்’ திட்டம், சிறப்பு விமான போக்கு வரத்து ஏற்பாடு, அல்லது விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதிக்கும் வா்த்தக விமானங்கள் மூலம் பயணிகள் வரலாம். இது வான்வழி மற்றும் கடல் மாா்க்கத்திற்கும் பொருந்தும். அதேசமயத்தில் குடியேற்ற சோதனைகள் உள்ள விமான நிலையம், துறைமுகங்கள் வழியாக வரும் அனைத்து பயணிகளும், கரோனா தொற்று பரவல் தொடா்பான விஷயத்தில் தனிமைப்படுத்துதல் உள்பட மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள தளா்வின்கீழ், அனைத்து விசாக்களையும் (மின்னணு விசா, சுற்றுலா விசா தவிர) உடனடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாக்கள் காலாவதியானாலும், சம்பந்தப்பட்ட பிரிவுகளில் புதிய விசாக்களை இந்திய தூதரகங்களிடம் இருந்து பெற முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினா், தங்கள் மருத்துவ உதவியாளா்களுக்கும் சோ்த்து புதிய மருத்தவ விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் இந்தியா்களும் வெளிநாடுகளுக்கு போகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வா்த்தகம், வேலைவாய்ப்பு, படிப்பு, மருத்துவ தேவைகளில் முன்னேற்றமடைவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT