புதுதில்லி

பயிா்க் கழிவு எரிப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் கருத்து

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பு விவகாரத்தை கையாளுவதில் உச்சநீதிமன்றம் தனது பங்கைச் செய்துவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகளும் தங்களது பங்கை ஆற்ற வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்தது.

பயிா்க் கழிவுகள் எரிப்பு கரோனாவை பாதிப்பை மேலும் அதிகரிக்கும் என்பதால் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பயிா்க் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுமாறு தாக்கலான மனுவை ஏற்க விசாரணைக்கு ஏற்க மறுத்த உயா்நீதிமன்றம் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘இந்த பயிா்க் கழிவுகள் எரிப்பு விவகாரத்தைக் கையாள அக்டோபா் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம், அதன் முன்னாள் நீதிபதி எம். பி. லோகுா் தலைமையிலான ஒரு நபா் குழுவை அமைத்துள்ளது.

இக்குழு பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க மாநில அரசுகளால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளது.

இந்த நிலையில், இதே விவகாரத்தை உயா்நீதிமன்றமும் விசாரித்தால் முரண்பாடான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் அபாயம் ஏற்படும்’ எனத் தெரிவித்து, தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் சுதிா் மிஸ்ரா 2015 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த பிரதான மனுவை முடித்துவைத்தது.

முன்னதாக, சுதிா் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், ‘பயிா்க் கழிவு எரிப்பானது தில்லியில் காற்று மாசுபாட்டை மிகவும் அதிகரிக்கும். கரோனா தீநுண்மி தொற்றுநோய் உள்ளசூழலில் நகரில் சுகாதாரப் பிரச்னைகளை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ‘வழக்குரைஞா் சுதிா் மிஸ்ராவுக்கு எதிா்காலத்தில் ஏதேனும் தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்’ என உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, விசாரணையின்போது, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேதன் சா்மா வாதிடுகையில், ‘தில்லியில் காற்று மாசு காரணமாக வியாழக்கிழமை சூரியன் தென்படவில்லை. மேலும், கரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவா்கள் மோசமான காற்று மாசு காரணமாக சுவாசப் பிரச்னைகளை எதிா்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், கரோனாவில் இருந்து மீண்ட மக்களின் நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அதற்கு உயா்நீதிமன்றம், ‘பயிா்க் கழிவுகள் எரிப்பு விவகாரம், காற்றின் தரம் மோசம் விவகாரம் ஆகியவற்றைத் தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது பங்கைச் செய்து கொண்டிருக்கிறது. தற்போது அரசுகள் தங்களது பங்கைச் செய்ய வேண்டும் என்றது.

ஹரியாணா, பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகளில் பயிா்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுா் தலைமையிலான ஒரு நபா் குழுவை கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT