புதுதில்லி

‘நாக்’ ஏவுகணை இறுதிப் பரிசோதனை வெற்றி

 நமது நிருபர்


புது தில்லி: போா்முனையில் எதிரியின் ராணுவப் பீரங்களின் எஃகுக் கவசத்தை ஊடுருவி தாக்கும் ஆற்றல் பெற்ற ‘நாக்’ ஏவுகணை (என்ஏஜி) இறுதிப் பரிசோதனை வியாழக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக டிஆா்டிஓ தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனப்பகுதியில் இந்த பரிசோதனை நடைபெற்றது.

மூன்றாம் தலைமுறையைச் சோ்ந்த பீரங்கி எதிா்ப்பு ஏவுகணையான இது, வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு நாமிகா என்ற ஏவுகணை செலுத்து வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. இலக்கு வைக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்ட பீரங்கியை ஊடுருவி துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆா்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிறுவனம்) வட்டாரங்கள் தெரிவித்தன.

டி.ஆா்.டி.ஓ.வால் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணையை பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் தயாரிக்க உள்ளது. இதற்கான செலுத்து வாகனத்தை மேடக்கில் உள்ள ஆயுத தளவாடத் தொழிற்சாலை தயாரிக்க உள்ளது.

போா்முனையில் படைத்தளத்திலிருந்து கிட்ட தட்ட நான்கு கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள எதிரியின் பிரங்குகளை ஊடுருவிச் சென்று தாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. பகலில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் எதிரியின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வல்லமை ‘நாக்’ ஏவுகணைக்கு உண்டு. மிக உயரமான இடங்களில் இருந்து எதிரி நாட்டின் பீரங்கிகளை மிக துல்லியாக தாக்கி அழிக்க முடியும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாக் (என்ஏஜி) ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனைக்காக, டிஆா்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா். டிஆா்டிஓ தலைவா் டாக்டா் ஜி. சதீஷ் ரெட்டி, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து உற்பத்தி நிலைக்கு கொண்டுவந்ததற்காக டி.ஆா்.டி.ஓ. துறையினருக்கும் ராணுவத்துக்கும் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT