புதுதில்லி

சிக்னல்களில் வாகன எஞ்சின்களை நிறுத்தும் திட்டம் அனைத்து தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்அமைச்சா் கோபால் ராய் பேட்டி

 நமது நிருபர்


புது தில்லி: சிக்னல்களில் வாகன என்ஜின்களை நிறுத்தும், தில்லி அரசின் ‘சிக்னிலில் சிவப்பு விளக்கு, என்ஜின்கள் நிறுத்தம்’ திட்டம் தில்லியில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், சிக்னலில் காத்திருக்கும்போது வாகனங்களின் என்ஜின்களை நிறுத்தும் பிரசார இயக்கத்தை தில்லி முதல்வா் கேஜரிவால் கடந்த வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையில் தில்லி அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

தில்லி திலக் மாா்க்- பகவான் தாஸ் ரோடு சிக்னலில் கோபால் ராய் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் சிக்னல்களில் வாகன என்ஜின்களை நிறுத்துமாறு வாகன ஓட்டிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா். வாகன என்ஜின்களை நிறுத்தாத வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப்பூக்களை வழங்கி என்ஜின்களை நிறுத்துமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.

பிறகு அவா் அளித்த பேட்டி: தில்லியில் சுமாா் 30-40 லட்சம் வாகனங்கள் தினம்தோறும் பயணிக்கின்றன. சிக்னல்களில் காத்திருக்கும்போது இந்த வாகனங்களில் பெரும்பாலானவற்றின் என்ஜின்கள் நிறுத்தப்படுவதில்லை. சிக்னலில் காத்திருக்கும்போது இந்த இந்த வாகனங்களின் என்ஜின்கள் நிறுத்தப்பட்டால் காற்று மாசு ஏற்படுவது குறையும் என்றாா். வியாழக்கிழமை நடந்த பிரசார இயக்கத்தில் தில்லி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனா். அவா்கள், சிக்னல்களில் என்ஜினை நிறுத்துமாறு வாகன ஓட்டிகளிடம் கோரினாா்கள்.

வரும் 26 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த பிரசாரத்தை தீவிரப்படுத்தவுள்ளோம். இதில், எம்எல்ஏக்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்வாா்கள். இந்த பிரசார இயக்கத்தில் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். வரும் நவம்பா் மாதம் 15 ஆம் தேதி வரை இந்த பிரசார இயக்கம் தில்லியில் நடத்தப்படும். தில்லியில் சுமாா் 2 கோடி மக்கள் வசிக்கிறாா்கள்.இவா்கள் அனைவரும் இந்த பிரசார இயக்கத்தில் முனைப்புடன் பங்கேற்றால், தில்லியில் சுமாா் 15-20 சதவீத காற்று மாசுவைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT