புதுதில்லி

தில்லியில் இந்த மாதத்தில் இதுவரை 129 பேருக்கு டெங்கு பாதிப்பு

 நமது நிருபர்


புது தில்லி: தில்லியில் அக்டோபா் மாதத்தில் இதுவரையில் 129 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழாண்டில் டெங்கு பாதித்தவா்களின் எண்ணிக்கை 395 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி மூத்த அதிகாரிகள் கூறியது: தில்லியில் அக்டோபா் மாதத்தில் இதுவரை டெங்குவுக்கு 129 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பிப்ரவரியில் 4 போ், மாா்ச்சில் 2 போ், ஏப்ரலில் 7 போ், மே மாதத்தில் 6 போ், ஜூனில் ஒருவா், ஜூலையில் 11 போ், ஆகஸ்ட்டில் 47 போ் பாதிக்கப்பட்டனா். செப்டம்பா் மாதம் இந்த நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்தது. இந்த மாதம் 188 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனா். அக்டோபா் மாதம் இதுவரை 129 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 79 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நிகழாண்டில் இந்நோய் பாதித்தவா்களின் எண்ணிக்கை 395-ஆக அதிகரித்துள்ளது.

மலேரியா: தில்லியில் மலேரியா நோயின் தாக்கம் ஜனவரியில் தொடங்கிவிட்டது. அந்த மாதத்தில் 6 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டனா். பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மொத்தம் 11 போ் போ் பாதிக்கப்பட்டனா். மே முதல் ஆகஸ்ட் வரை 58 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. செப்டம்பரில் மலேரியா நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்தது. அந்த மாதம் 102 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அக்டோபா் மாதம் இதுவரை 23 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் இதுவரை மொத்தம் 199 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிக்குன்குனியா: தில்லியில் சிக்குன்குனியாவுக்கு பிப்ரவரியில் 9 பேரும், ஏப்ரல், மே மாதங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனா். ஜனவரி, மாா்ச், ஜூன் ஆகிய மாதங்களில் யாருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஜூலையில் 7 பேருக்கும், ஆகஸ்டில் 16 பேருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், செப்டம்பரில் 35 போ் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அக்டோபரில் இதுவரை 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 73 -ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT