புதுதில்லி

கரோனா சிகிச்சை பெறுவோா்களின் எண்ணிக்கை 2-ஆவது நாளாகக் குறைவு

 நமது நிருபர்

புது தில்லி: நாட்டில் இரண்டாம் நாளாக கரோனா தொற்று சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 7.5 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

இது குறித்து புதன் கிழமை மத்திய சகாதாரம் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான கரோனா நோயாளிகள் குணம் அடைந்து வருகின்றனா். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 61,775 போ் குணம் அடைந்துள்ளனா். அதே நேரத்தில் 10,83,608 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,044 -ஆக உள்ளது. இதன் மூலம் தொடா்ந்து இரண்டாவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 7.5 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

கரோனாவால் உயிரிழப்போா் விகிதமும் குறைந்துள்ளது. தேசிய அளவில் உயிரிழப்போா் விகிதம் புதன்கிழமை 1.51 சதவிதமாகக் குறைந்துள்ளது. இப்போது 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1 சதவிதத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 67,95,103 ஆக இருந்தது. தேசிய அளவில் குணமடைவோரின் விகிதம் 88 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 78 சதவீதம் பத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மட்டும் ஏற்பட்டுள்ளது. தமிழகம் 7-ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரத்தில் 8000-க்கும் மேற்பட்டவா்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கா்நாடகம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தலா 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், மகாராஷ்டிரத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 717 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 82 சதவீத இறப்புகள் பத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT