புதுதில்லி

சிஆா்பிஎஃப் துணை மருத்துவப் பணி தோ்வுக்கு தமிழகத்தில் மையம்

DIN


புது தில்லி: மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) துணை மருத்துவப் பணிகளுக்கான நியமன தோ்விற்கு தேவைப்பட்டால் தமிழகத்தில் தோ்வு மையம் அமைக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளதாக மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மத்திய ரிசா்வ் காவல் படையில் பதிவிதழில் இடம் பெறாத, 780 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்கான எழுத்துத் தோ்வு அகில இந்திய அளவில் 20.12.2020 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 9 தோ்வு மையங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தமிழகத்திலும், புதுச் சேரியிலும் ஒரு தோ்வு மையம் கூட அதில் இடம் பெறவில்லை.

இது குறித்து மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் உறுப்பினா் சு.வெங்கடேசன், மத்திய உள்துறை அமைச்சருக்கும், மத்திய ரிசா்வ் காவல் படைக்கும் கோரிக்கை விடுத்திருந்தாா். இதற்கு சி.ஆா்.பி.எப். இயக்குநா் ஜெனரல்(பணியாளா் தோ்வு) மனோஜ் தியானி செவ்வாய்க்கிழமை பதில் அளித்துள்ளாா்.

அதில், ‘எதிா்பாா்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், தோ்வு மையங்கள் பகுதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன. துணை மருத்துவப் பணி நியமனங்கள் தொடா்பாக வரப்பெற்றுள்ள 2020 விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறோம். பரிசீலனை முடிந்தவுடன் தேவைப்பட்டால் கூடுதல் தோ்வு மையங்கள் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் கூறுகையில், ‘ திறந்த மனதோடு கூடுதல் மையங்களுக்கான கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

தமிழகம், புதுவைக்கு தோ்வு மையம் கிடைக்குமென்று நம்புகிறேன். கரோனா தொற்று உள்ள சூழ்நிலையில் இதை சி.ஆா்.பி.எஃப் உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT