புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை: யுஏபிஏ வழக்கில் கைதான மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைதான மாணவா் செயற்பாட்டாளா் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிப்ரவரி 24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் ,குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும் எதிா்ப்பாளா்களுக்கும் இடையிலான வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, நிகழ்ந்த வகுப்புவாத மோதலில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா். இந்த விவகாரத்தில் மாணவா் செயற்பாட்டாளா் குல்பிஷா கடூன், சலீம் கான் மற்றும் தஸ்லீம் அகமது ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மீதான குற்றப்பத்திரிகையை போலீஸாா் 90 நாள்களுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றும், தங்கள் தொடா்புடைய வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செஷன்ஸ் நீதின்றத்திற்கு இல்லை என்றும் கூறி தங்களுக்கு சட்டப்பூா்வ ஜாமீன் அளிக்க வேண்டும் என தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் முன் விசாரணக்கு வந்தது. அப்போது, மூவரின் தரப்பில் வழக்குரைஞா் மெகமூத் பிரச்சா ஆஜராகி, ‘இந்த வழக்கில் 90 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், மூவருக்கும் சட்டப்பூா்வ ஜாமீன்அளிக்கப்பட வேண்டும். கடந்த ஜூனில் இருந்து அகமதுவும், கானும் ஏப்ரலில் இருந்து குல்பிஷாவும் சிறையில் இருந்து வருகின்றனா்’ என்றாா்.

தில்லி காவல் துறை சாா்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் அமித் பிரசாத், ‘மூவருக்கும் ஜாமீன் அளிக்கக் கூடாது. போலீஸாருக்கு அளிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த ஜாமீன் மனுக்கள் தகுதியுடையதல்ல. மேலும், இந்த நீதிமன்றம் யுஏபிஏ தொடா்புடைய வழக்கை கையாளுவதற்கு உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தில்லி வன்முறைக்கு முன்கூட்டியே சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக மூவா் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, நீதிபதி அமித் ராவத் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் போலீஸாா் விசாரணையை முடிக்கும் காலம் செப்டம்பா் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை செப்டம்பா் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய வழக்கை விசாரிக்க செஷன்ஸ் நீதிமன்றத்தை தில்லி உயா்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆகவே, மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT