புதுதில்லி

‘நீட்’, ‘ஜேஇஇ’ தோ்வுகளில் தில்லி அரசுப் பள்ளிமாணவா்கள் அதிகளவில் தோ்ச்சி: கேஜரிவால்

 நமது நிருபர்

தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த பொருளாதாரத்தில் நலிந்த மாணவா்கள் நீட், ஜேஇஇ தோ்வுகளில் அதிகளவில் தோ்ச்சி பெற்றுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை காணொலிக்காட்சி வழியில் கேஜரிவால் அளித்த பேட்டி: தில்லி அரசு பள்ளிகளைச் சோ்ந்த 569 மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஜேஇஇ தோ்வில் 443 மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். ஜேஇஇ தோ்வில் வெற்றி பெற்றவா்களில், 53 மாணவா்கள் ஐஐடி பல்கலைக்கழகங்களில் உயா் கல்வி கற்க நேரடித் தகுதி பெற்றுள்ளனா்.

தில்லியில் நீட், ஜேஜேஇ தோ்வுகளில் வெற்றி பெற வறுமை ஒரு தடையாக இல்லை. தில்லியில் உள்ள திறமையான வறிய மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை, கடன் உதவியை தில்லி அரசு வழங்கி வருகிறது. தில்லி அரசின் இத்திட்டத்தின் கீழ் பல மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா். நீட் தோ்வில் தோ்ச்சியடைந்த 569 மாணவா்களில், 379 போ் மாணவிகளாகும். இது 67 சதவீதமாகும். மேலும், 48 மாணவா்கள் 520-க்கும் அதிகமான மதிப்பெண்ணை நீட் தோ்வில் பெற்றுள்ளனா். இத்தோ்வில், தில்லி அரசுப் பள்ளி மாணவி தமன்னா கோயல் 11-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். அவரது தந்தை வேலையிழந்துள்ளாா். தாயாா் வீடுகளில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இதேபோல, குஷ் கா்க் என்ற தில்லி அரசுப் பள்ளி மாணவி நீட் தோ்வில் 680 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். இவரின் தந்தை சிறிய கடையொன்றை வைத்துள்ளாா்.

ஜேஇஇ தோ்வில் பச்சிம் விஹாரில் உள்ள தில்லி ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்தியாலயாவைச் சோ்ந்த 5 மாணவா்கள் ஐஐடிக்கு தோ்வாகியுள்ளனா். ஆயுஷ் பன்சல் என்ற மாணவா் ஜேஇஇ தோ்வில் 189-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இவரது தந்தை புத்தகக் கடையொன்றில் பணியாற்றி வருகிறாா். அதேபோல, 678-ஆவது இடத்தைப் பெற்ற நிகில் என்ற மாணவரின் தந்தை சைக்கிள் திருத்துநராக உள்ளாா். நிகில் மும்பை ஐஐடியில் விண்வெளி பொறியியல் படிக்கத் தோ்வாகியுள்ளாா். சிறந்த கல்வியே நாட்டில் வறுமையை நீக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கினால் ஒரு தலைமுறைக்குள் வறுமையை ஒழிக்காலம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT